சிவப்பு நிறத்தில் கொட்டும் வெள்ளி அருவி | Kodaikanal | Kodaikanal rain | Rain Updates
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு வலுவடைந்து கனமழை கொட்டுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் இடைவிடாமல் பெய்த மழையால் 2வது நாளாக நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மூங்கில்காடு ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் கொடைக்கானலில் 13 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளங்கி, கோம்பை, மூங்கில்காடு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.