உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பயிற்சி மருத்துவரை சீண்டிய வடமாநில ஆசாமி கைது! | Coimbatore GH | Kovai Doctor | kovai Doctor Issue

பயிற்சி மருத்துவரை சீண்டிய வடமாநில ஆசாமி கைது! | Coimbatore GH | Kovai Doctor | kovai Doctor Issue

கோவை அரசு மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணி முடிந்து கிளம்பினார். பார்க்கிங்கில் தனது பைக்கை எடுக்க சென்ற அவரை ஆசாமி ஒருவன் வழி மறித்தான். தனது ஆடைகளை கழற்றி அவரிடம் அத்து மீற முயன்றான். அதிர்ச்சி அடைந்த பெண் அவனை தள்ளிவிட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு செக்யூரிட்டி ஓடி வந்தார். சுதாரித்த அந்த ஆசாமி தப்பி ஓடினான். தகவல் அறிந்த சக பயிற்சி மருத்துவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !