உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பணி முடித்து வீடு திரும்பும் போது நடந்த சோகம்! | Kovai Inspector | Inspector Accident | Singanallur

பணி முடித்து வீடு திரும்பும் போது நடந்த சோகம்! | Kovai Inspector | Inspector Accident | Singanallur

கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பானுமதி வயது 52. நேற்று இரவு பணி முடித்து இன்று அதிகாலை தனது மகனுடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டு அருகே வந்து கொண்டு இருந்த போது சாலை பள்ளத்தில் விழுந்து பைக் குலுங்கியது. இதில் எதிர்பாராத விதமாக பானுமதி கீழே விழுந்தார். அடுத்த நொடியே பின்னால் அரிசி மூட்டை ஏற்றி வந்த ஈச்சர் லாரி பானுமதி மீது ஏறி இறங்கியது. அவரது மகன் எதிர் திசையில் விழுந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து தொடர்பான காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகியது.

செப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை