உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பரூக் அப்துல்லாவுக்கு பதிலடி கொடுத்த பாஜ | Lashkar Commander 3 Terrorists Killed In kashmir

பரூக் அப்துல்லாவுக்கு பதிலடி கொடுத்த பாஜ | Lashkar Commander 3 Terrorists Killed In kashmir

உமர் அப்துல்லா கடந்த 16ம் தேதி முதல்வராக பதவி ஏற்றார். அவர் முதல்வரான பிறகு தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. வெளி மாநிலத்தவரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குகின்றனர். 20ம்தேதி கந்தர்பாலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு டாக்டர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 24ம் தேதி பாரமுல்லாவில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள், 2 தொழிலாளிகள் என 4 பேர் பலியாயினர். நேற்று பட்கம் மாவட்டத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்களை பயங்கரவாதிகள் சுட்டனர். இன்றும் கூட ஸ்ரீநகர் மற்றும் அனந்த் நாக்கில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் சண்டை நடந்தது. அனந்த் நாக்கில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரில் நடந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். 4 போலீசார் காயமடைந்தனர். ஸ்ரீநகரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சேர்ந்தவன். லஷ்கர் இ தாய்பா அமைப்பின் டாப் கமாண்டர் உஸ்மான் என்ற சோட்டா வாலித் Chota Walid என தெரிய வந்தது.

நவ 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை