உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / நடுவழியில் பழுதாகி நின்ற லிப்ட்! இது 2வது முறை | Lift malfunction | Collector Office | Vellore

நடுவழியில் பழுதாகி நின்ற லிப்ட்! இது 2வது முறை | Lift malfunction | Collector Office | Vellore

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அம்மாவட்ட கலெக்டர் ஆபீஸ் ஏபிளாக், பி பிளாக் என இரு கட்டடங்களாக செயல்பட்டு வருகிறது. இரண்டிலும் 5 தளங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன் ஏ பிளாக்கில் உள்ள லிப்ட் பழுதாகி சிலர் உள்ளே சிக்கி கொண்டனர். அதன் பின் அந்த லிப்ட்டை முழுதுமாக அகற்றி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று பி பிளாக்கில் உள்ள லிப்ட்டில் மக்கள் மற்றும் ஊழியர்கள் என 12 பேர் ஐந்தாவது தளத்திலிருந்து வந்து கொண்டிருந்தனர். திடீரென லிப்ட் பாதியில் நின்று 12 பேரும் உள்ளேயே சிக்கி தவித்தனர். வேலூர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் டிரில் மிஷன் மூலம் துளையிட்டு ரிப்பேரை சரி செய்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இரண்டு பிளாக்குகளிலும் லிப்ட் பழுதாகி உள்ளது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 5 மாடி ஏறி இறங்குவதும் வயதானவர்களுக்கு மிகவும் சிரமம். சீக்கிரமாக பழுதை முழுமையாக சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி