உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ரவுடி சுபாஷின் கதைக்கு முடிவுரை எழுதிய போலீஸ் | Madurai encounter | Police | Rowdy Encounter

ரவுடி சுபாஷின் கதைக்கு முடிவுரை எழுதிய போலீஸ் | Madurai encounter | Police | Rowdy Encounter

மதுரை மாவட்டம், தனக்கன்குளம், மொட்டமலையை சேர்ந்த ரவுடி கிளாமர் காளி என்கிற காளீஸ்வரன் கடந்த 22ம் தேதி கொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக, ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய ரவுடி சுபாஷ் சந்திரபோசை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவன் மீது மேலும் சில குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. போலீசார் இன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, ரவுடி சுபாஷ் காரில் வந்துள்ளான். அவனை போலீசார் பிடிக்க முயன்றபோது எஸ்கேப் ஆகியுள்ளான். 2 செக்போஸ்களில் இருந்து தப்பிய ரவுடியை, போலீசார் சேஸிங் செய்து சென்றுள்ளனர். மதுரை சிந்தாமணி அருகே உள்ள வனப்பகுதியில் ரவுடியின் கார் நுழைந்தது. பின் தொடர்ந்து சென்ற தனிப்படை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் ரவுடி சுபாஷை கைது செய்ய முயன்றனர். அப்போது, அவன் அரிவாளால் வெட்டியதில் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி