உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மோசமான வானிலையால் வானில் வட்டமடித்த இண்டிகோ விமானம் | Indigo flight | Landing problem | Madurai

மோசமான வானிலையால் வானில் வட்டமடித்த இண்டிகோ விமானம் | Indigo flight | Landing problem | Madurai

ஹைதராபாத்தில் இருந்து 140 பயணிகளுடன் காலை 6.40க்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் 8.05 மணிக்கு மதுரை ஏர்போர்ட்டில் தரை இறங்க வேண்டும். ஆனால் மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், கருமேகங்களும் சூழ்ந்தன. மோசமான வானிலையால் ஹைதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. திருமங்கலம், சிவகங்கை பகுதிகளில் தொடர்ந்து வானில் வட்டமடித்தது. 8.10 மணிக்கு மேக கூட்டங்கள், கருமேகங்கள் சற்று விலகியதும் இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது. மோசமான வானிலை காரணமாக 140 பயணிகளுடன்  பயணிகளுடன் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ