கத்தி குத்தில் இருந்து உயிர்தப்பிய போலீஸ்: பக்தர்கள் முன் பகீர் சம்பவம் man attacks police| Tirupur
திருப்பூர் வீரராக பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு தரிசனம் காண பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அங்கு வந்த போதை ஆசாமி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருடன் தகராறு செய்தார். அவரை மிரட்டி, அங்கிருந்து வெளியேற்ற போலீசார் முயன்றனர். அப்போது, கான்ஸ்டபிள் ராமகிருஷ்ணன் மீது எகிறிய அந்த ஆசாமி, மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து, வாடா, வா.. என ஆவேசமாக கூறியபடி குத்துவதற்கு பாய்ந்தார். சுதாரித்த கான்ஸ்டபிள், தமது பெல்ட்டை கழற்றி ஆசாமியை அடித்து தப்பிக்க முயன்றார். பக்தர்கள் முன் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. breath அங்கிருந்த மற்ற போலீசார் போதை ஆசாமியை பிடித்து கத்தியை பறித்தனர். அவரை சோதனையிட்டபோது, மிளகாய் தூள், தாக்குவதற்கு பயன்படும் பற்களுடன் கூடிய சிறிய ஆயுதம் இருந்தது. அவர் தஞ்சாவூரை சேர்ந்த இளங்கோ என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #TirupurTemple #VeeraRagavaPerumal #AttemptToStab #PolicemanEscaped