சிறையில் கிடைத்த நட்பு; விசாரணையில் திடுக் தகவல் | Mangaluru | Crime News | Dinamalar
கர்நாடகாவில் மங்களூரு அருகே உள்ள உல்லால் பகுதியில் கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. கடந்த 17 ம் தேதி முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் வங்கியில் புகுந்தது. துப்பாக்கி, கத்தி வைத்திருந்த அவர்கள் வங்கி ஊழியர்களை மிரட்டி, 4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர். அவர்கள், கேரளா வழியாக காரில் சென்றது சிசிடிவி பதிவு மூலம் போலீசாருக்கு தெரியவந்தது. கார் நம்பரை வைத்து அவர்கள் மும்பைக்கு சென்று இருக்கலாம் என கணித்தனர். மங்களூரு போலீஸ் தனிப்படை மும்பை விரைந்தது. கொள்ளையில் ஈடுபட்ட கண்ணன் மணி என்பவரை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, திருநெல்வேலியை சேர்ந்த யோசுவா மற்றும் முருகாண்டி ஆகிய 2பேருக்கும் தொடர்பு இருப்பதது தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் பிடித்தனர்.