உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / செல்போன் சர்வீஸ் சென்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு | Mobile service centre | Youth threaten | Petro

செல்போன் சர்வீஸ் சென்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு | Mobile service centre | Youth threaten | Petro

விழுப்புரம் புதுச்சேரி சாலை கோலியனூர் அடுத்த ரெட்டியார் மில் பஸ் ஸ்டாப்பில் ஜாகீர் உசேன் என்பவர் மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இங்கு தாமரைக்குளத்தை சேர்ந்த அருண் என்ற இளைஞர் தனது செல்போனை சர்வீஸ் செய்ய கொடுத்துள்ளார். நேற்று அருண் செல்போனை வாங்க வந்தபோது, ஜாகீர் உசேன் சர்வீஸ் செய்ததற்காக 200 ரூபாய் கேட்டுள்ளார். பணத்தை பிறகு தருகிறேன், செல்போனை இப்போது கொடு என அருண் கூறியுள்ளார். ஏற்கனவே 300 ரூபாய் பேலன்ஸ் இருப்பதால் இந்த பணத்தை கொடுத்தால் தான் செல்போனை கொடுப்பேன் என ஜாகீர் கறாராக கூறி இருக்கிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடந்த நிலையில், கடைசியில் பணம் தராமலேயே அருண் செல்போனை வாங்கி சென்றுள்ளார். இன்று திடீரென தனது நண்பனுடன் ஜாகீர் உசேன் கடைக்கு வந்த அருண், பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பினார். இதில் கடையில் இருந்த சர்வீஸ் செல்போன்கள், செல்போன் பாகங்கள் சேதமடைந்தன. கடை முழுதும் புகை மண்டலமாக மாறியது. கடைக்குள் இருந்த உசேனின் தம்பி ஷேக் அலாவுதீன் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினார். கண், காது பாதித்ததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தடயங்களை சேகரித்த நகர போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரிக்கின்றனர்.

மார் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ