உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மைசூரு அரண்மனையில் மோதி கொண்ட யானைகள் | Mysuru Palace | Dasara Elephants Fight | Mysuru Elephants

மைசூரு அரண்மனையில் மோதி கொண்ட யானைகள் | Mysuru Palace | Dasara Elephants Fight | Mysuru Elephants

மைசூரு தசரா திருவிழாவில் விஜயதசமி அன்று ஜம்போ சவாரி என்ற யானை ஊர்வலம் நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீது 750 கிலோ எடையுள்ள தங்க பல்லக்கு அமைத்து சாமுண்டீஸ்வரி தேவியை கொண்டு செல்வர். ஆண்டு தோறும் யானை முகாமுக்கு யானைகளை அனுப்பி பயிற்சி கொடுத்து, அதன் பின் ஊர்வலத்திற்கு அனுப்புவது வழக்கம். இந்த யானைகள் அமைதிக்கு பெயர் பெற்றவை, தசரா ஊர்வல பாதையில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியிலும் அமைதியை இழக்காது. அப்படி இருக்கையில் இந்த ஆண்டு விழாவுக்கு அழைத்து வரப்பட்ட யானைகள் மோதி கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. மைசூர் அரண்மனை வளாகத்துக்குள் அழைத்து வரப்பட்ட யானைகள் வெள்ளி இரவு உணவு உண்ணும் போது சிறு மோதல் ஏற்பட்டது. தசரா யானைகளான தனஞ்சயா மற்றும் காஞ்சன் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டன.

செப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ