உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / நீச்சல் குளங்களில் பரவும் உயிர் கொல்லி: சுகாதாரத்துறை பகீர் எச்சரிக்கை | Naegleria fowleri

நீச்சல் குளங்களில் பரவும் உயிர் கொல்லி: சுகாதாரத்துறை பகீர் எச்சரிக்கை | Naegleria fowleri

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 3 மாத குழந்தை உட்பட இரண்டு பேர் இந்த தொற்றால் இறந்தது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒமசேரியை 3 மாத குழந்தைக்கு கடந்த 28 நாட்களுக்கு முன் அமீபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கோழிக்கோடு அரசு ஆஸ்பிடல் ஐசியூவில் குழந்தை அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சையின் போதே குழந்தை இறந்தது. இதேபோல கோழிக்கோடு கப்பில் கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான ரமலா என்ற பெண்மணி அமீபா பாதிப்பால் இறந்தார். அவர் தனது வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளித்தபோது அமீபா பாதிப்புக்கு ஆளானது தெரியவந்தது.

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை