உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சென்னையில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை | NIA Raid | Chennai | Dinamalar News

சென்னையில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை | NIA Raid | Chennai | Dinamalar News

சென்னையில் 10 இடங்கள் உட்பட புதுக்கோட்டை, நாகர்கோவிலில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் சோதனை நடக்கிறது. அதிகாலையில் இருந்தே திடீர் சோதனை நடப்பதால் பல பகுதிகளில் பரபரப்பு உண்டானது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கனவே சென்னை ராயப்பேட்டையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதாக மே மாதம் ரகசிய தகவல் வந்தது. ராயப்பேட்டையை சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான், நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ், அகமது அலி ஆகிய 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். யூட்யூபில் வீடியோ வெளியிட்டு ஹிஷாப் உத் தஹீரிர் என்ற அமைப்புக்கு ஆள் சேர்த்த விவகாரம் தெரிய வந்ததால் 6 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட்டில் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி