தீபாவளி ஆட்டம் சோகத்தில் முடிந்தது North Indian labourer dies fight in bar coimbatore bar Nilambur
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் போபித்ரா (வயது 44). கடந்த சில வருடங்களாக சூலூரில் தங்கி இருந்து சுமை தூக்கும் வேலை பார்த்து வந்தார். தீபாவளியன்று மது குடிக்க நண்பர்களுடன் கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் பாருக்கு சென்றார். அங்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரவிந்த் (24) சப்ளையராக இருந்தார். போபித்ரா மற்றும் நண்பர்கள் 2 மணிநேரத்துக்கும் மேலாக மது அருந்தினர். போதை தலைக்கேறியதில் போபித்ரா எதிரே இருந்த இன்னொரு டேபிள் மீது கால்களை வைத்துக் கொண்டு சத்தமாக பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த சப்ளையர் அரவிந்த் கடுப்பானார். கால்களை கீழே வைங்க; என போபித்ராவிடம் கூறினார். ஆனால் போபித்ரா கண்டுகொள்ளவில்லை. காலை கீழே வைக்கும்படி மறுபடி அரவிந்த் சொன்னதும் போபித்ரா கோபத்தில் கத்தினார். இந்தியில் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அரவிந்தும் பதிலுக்கு திட்டினார். பக்கத்து மேஜையில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து, போபித்ராவின் வயிற்றில் சரமாரி குத்தினார். ரத்த வெள்ளத்தில் போபித்ரா சரிந்ததும், அரவிந்த் தப்பி ஓடினார். பார் ஊழியர்கள் போபித்ராவை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.