உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மீண்டும் கலந்ததா? மக்கள் அச்சம்! | Oil Spill in Chennai | CPCL | Oil spill in Ennore

மீண்டும் கலந்ததா? மக்கள் அச்சம்! | Oil Spill in Chennai | CPCL | Oil spill in Ennore

கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் கொட்டிய கனமழையின் போது பெரும்பாலான இடங்களில் நீர் தேங்கி மக்கள் அவதி அடைந்தனர். மற்றொரு பேரிடியாக ஆயில் நிறுவனங்களில் இருந்து எண்ணெய் கழிவுகள் தேங்கிய நீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்தது. பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. எண்ணெய் கழிவுகளை அகற்றவே படாத பாடு பட்டனர். இந்த சூழலில் மணலி சிபிசிஎல் தொழிற்சாலைக்கு எதிரே சாலைக்கு அடியில் செல்ல கூடிய குழாய் ஒன்று உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது. இந்த எண்ணெய் சாலையில் தேங்கி அருகே உள்ள குட்டையில் கலக்கிறது. சென்னையில் இரு தினங்களுக்கு முன் கொட்டிய கன மழையில் இது கலந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. குழாய் எந்த நிறுவனத்துக்கு சொந்தமானது, குழாய் உடைப்பை சரி செய்யாதது ஏன்? கடந்த ஆண்டை போல மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டும். சீக்கிரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ