உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மர்ம ஆசாமியை தேடும் ரயில்வே போலீஸ்! | Old Couple | Cheated | Anesthesia Mixed in Water

மர்ம ஆசாமியை தேடும் ரயில்வே போலீஸ்! | Old Couple | Cheated | Anesthesia Mixed in Water

ஓசூரை சேர்ந்தவர் ராஜு வயது 75. மனைவி மாரியம்மாள் வயது 67. இருவரும் எர்ணாகுளத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தை பார்க்க சென்றனர். பார்த்துவிட்டு பின்னர் எர்ணாகுளத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ரயிலில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ரயிலில் 40 வயது மதிக்கத்தக்க நபர் அவர்களுடன் நட்பாக பேசி, குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்த வயதான தம்பதி சிறிது நேரத்தில் மயங்கினர். அந்த ஆசாமி தம்பதி அணிந்திருந்த 5 பவுன் நகை, 10 ஆயிரம் ரூபாய், 2 மொபைல்களை எடுத்துக் கொண்டு தப்பினான். வயதான தம்பதி ஜோலார்பேட்டை நிலையத்தில் இறங்காததால், சந்தேகமடைந்த அவர்களது மகன் உடனடியாக ரயில்வே போலீசில் புகார் அளித்தார். காட்பாடிக்கு வந்த ரயிலில் போலீசார் ஏறி பார்த்த போது இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர்.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி