எல்லையில் போர் பதற்றம்: வீடுகளை காலி செய்யும் பாக் மக்கள் | OPERATION SINDOOR | border areas
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களை இந்திய படைகள் ஏவுகணை வீசி தாக்கி அழித்தன. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம், நேற்றிரவு திடீரென காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற எல்லை மாநிலங்களில் உள்ள பல நகரங்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்த முயன்றது. ஆனால், வான் பாதுகாப்பு சாதனங்கள் மூலம் ஏவுகணை, டரோன்களை இடைமறித்து இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்திய நகரங்கள் மீது குண்டு வீச முயன்ற பாகிஸ்தானின் 3 போர் விமானங்களையும் இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதன்மூலம் பாகிஸ்தான் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. பாகிஸ்தானின் அத்துமீறிய இந்த செயல்களால் ஆவேசமான இந்திய ராணுவம், நேற்றிரவு இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ கட்டமைப்புகள், கராச்சி துறைமுகம் உள்ளிட்ட இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்பிறகும் வாலாட்டினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானை இந்தியா எச்சரித்துள்ளது. தொடரும் போர் பதற்றத்தால் இரு நாடுகளின் எல்லையோரங்களில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துபோயிருக்கின்றனர். பாகிஸ்தானில் உள்ள வாகா டவுனை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் குடும்பத்துடன் பாதுகாப்பான இடங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர். கால்நடைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் வாகனங்களில் கிளம்பியவண்ணம் உள்ளனர். உயிரை காப்பாற்றிக் கொள்ள வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலையை எண்ணி பெண்கள் கதறி அழுகின்றனர்.