உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கடையில் தனியாக இருந்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி | CCTV | Chain Snatching

கடையில் தனியாக இருந்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி | CCTV | Chain Snatching

கரூர் - திருச்சி ரோட்டில் காந்திகிராமம் என்ற இடத்தில் மருந்து கடை உள்ளது. நேற்றிரவு 10 மணிக்கு கடையில் பெண் மட்டுமே இருந்தார். இதை நோட்டமிட்ட இளைஞர், மருந்து வாங்குவது போல் கடைக்கு வந்தார். அவர் கேட்ட மருந்தை பெண் எடுத்து வந்து தந்தபோது, அந்த இளைஞர், திடீரென பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றார். சுதாரித்த பெண், இளைஞரின் கையை பிடித்து தட்டிவிட்டார். அப்போது நிலைத்தடுமாறி கடைக்குள் விழுந்தார். செயின் பறிபோகாமல் தப்பியது. இதை எதிர்பாராத இளைஞர் உடனே அங்கிருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார்.

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி