போலீஸ் இருக்கும் போதே துரத்தி துரத்தி சம்பவம் | Police | Chennai | CCTV
சென்னை பூந்தமல்லி குமணன்சாவடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு ஒருவர் கத்தியுடன் இன்னொருவரை வெட்ட துரத்தி சென்றுள்ளார். இது குறித்து அருகில் இருந்த போக்குவரத்து போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், காவலர் லோகேஸ்வரன் ஸ்பாட்டுக்கு சென்றனர். அப்போது போலீசை நோக்கி ஓடி வந்த நபரை பின்தொடர்ந்து வந்த நபர் தனது கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கையின் மணிக்கட்டில் வெட்டினார். காயமடைந்த நபர் உயிருக்கு பயந்து போலீசுக்கு பின்னால் சென்று மறைந்து கொண்டார். இருந்தும் விடாத அந்த நபர், வெட்டுபட்டவரை மீண்டும் கீழே தள்ளி வெட்ட பாய்ந்தார். சுற்றி இருந்தவர்கள் குற்றவாளியை மடக்கி பிடித்து அவர் கையில் இருந்த அரிவாளை பிடுங்கினர்.