/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ போலீஸ் வாகனத்தில் பணியின்போது மது அருந்திய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் | Police SSI Lingeshwaran Suspended
போலீஸ் வாகனத்தில் பணியின்போது மது அருந்திய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் | Police SSI Lingeshwaran Suspended
சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் லிங்கேஸ்வரன். சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்த பின்பு, அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்வது, சிறையில் இருந்து ஆஜர்படுத்த கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் எஸ்.எஸ்.ஐ லிங்கேஸ்வரனும் கைதிகளை அழைத்துச் செல்லும் பொறுப்பில் இருந்தார். இவர், போலீஸ் வாகனத்தில் பணியின்போது சீருடை அணியாமல், மது அருந்தும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நவ 14, 2024