உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மோப்பநாய் உதவியுடன் திருடர்களை பிடித்த போலீஸ் | Penny Dog | Police | Ahmedabad

மோப்பநாய் உதவியுடன் திருடர்களை பிடித்த போலீஸ் | Penny Dog | Police | Ahmedabad

குஜராத் மாநிலம் ஆமதாபாத் சரக்வாலா கிராமத்தை சேர்ந்தவர் உடேசின் சோலங்கி. நிலத்தை விற்று வீட்டில் வைத்திருந்த ஒரு கோடியே 7 லட்சம் ரூபாயை காணவில்லை என போலீசில் புகார் கூறினார். திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதில், பென்னி என்ற மோப்ப நாயும் இடம் பெற்றிருந்தது. போலீசார் கொள்ளை தொடர்பாக துப்பு கிடைக்காமல் குழம்பினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் பென்னியை அழைத்துச் சென்றனர். திருடர்கள் தப்பும்போது வழியில் விட்டு சென்ற பையை பென்னி மோப்பம் பிடித்தபடி ஓடியது. பின்னர் அதே பகுதியில் புத்தா என்பவர் வீட்டுக்கு ஓடி சென்றது. வீட்டின் முன் படுத்து கொண்டது. போலீ்சார் புத்தா உள்பட திருட்டு லிஸ்டில் இருக்கும் பலரையும் வரிசையாக நிற்க வைத்தனர். பென்னியை வரவழைத்தனர். வரிசையாக நின்றவர்களில் புத்தாவை பென்னி கவ்வி பிடித்தது. போலீசார் புத்தாவை ஸ்டேசனுக்கு அழைத்து சென்று முறைப்படி விசாரித்தனர். புத்தா திருடியதை ஒப்புக்கொண்டான். புத்தா வீட்டில் இருந்து பணத்தை மீட்டனர்.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை