உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ராமநாதபுரம் பேய் மழையில் வெள்ளக்காடான ஆஸ்பிடல் | Ramanathapuram | Hospital

ராமநாதபுரம் பேய் மழையில் வெள்ளக்காடான ஆஸ்பிடல் | Ramanathapuram | Hospital

வளிமண்ட சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. புதனன்று காலை 6 முதல் மாலை 4 மணி வரை ராமநாதபுரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 41.1 செ.மீட்டரும், தங்கச்சிமடத்தில் 32.2 செ.மீட்டரும், பாம்பனில் 27 செமீட்டரும், மண்டபத்தில் 23 செ.மீட்டர் மழையும் பதிவானது. மிக குறுகிய இடத்தில் உருவான வலுவான மேக கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நடந்தது என வானிலை ஆய்வு மையம் கூறியது. கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. 150 கோடியில் கட்டப்பட்ட ராமநாதபுரம் அரசு ஆஸ்பிடலுக்குள் வெள்ளம் புகுந்தது. கட்டிமுடித்து ஒருவருடம் கூட ஆகாத நிலையில் நோயாளிகள் பிரிவில் கூரையில் இருந்து மழை நீர் கசிந்தது. தண்ணீர் கட்டடத்துக்கு உள்ளே தேங்கியதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

நவ 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை