தாத்தா, சித்தப்பா, அண்ணன் உட்பட 15 பேருக்கு தண்டனை | rape case | POCSO Act | Villupuram
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியர் வீட்டில் அவர்களது 2 பேத்திகள் தங்கி படித்தனர். மூத்த பேத்திக்கு வயது 9. 2வது பேத்திக்கு வயது 7. சிறுமியரின் தாய், 2வது திருமணம் செய்தார். முதல் கணவருக்கு பிறந்த மகள்களை 2வது கணவர் ஏற்காததால் இருவரையும் தன் தாய், தந்தை பராமரிப்பில் விட்டார், சிறுமியரின் தாய். அதன்பிறகுதான், அக்கா, தங்கை வாழ்க்கையில் விதி விளையாடியது. 2017 முதல் 2019 வரை கிட்டத்தட்ட 2 ஆண்டு காலத்தில் 2 சிறுமிகளை பல காமக்கொடூரன்கள் தங்களது காம இச்சைக்கு இரையாக்கினர். அத்தனை பேரும் அந்த சிறுமியரின் நெருங்கிய சொந்தக்காரர்கள்தான். இதில் கொடுமை என்னவென்றால், காமக்கொடூரர்களுக்கு சிறுமியரின் தாத்தா துணை போனதுதான். கடைசியில் அவரும்கூட சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது கொடுமையின் உச்சம்.