உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ரேபிடோ டிரைவர் சில்மிஷம் பைக்கிலிருந்து குதித்த பெண்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி

ரேபிடோ டிரைவர் சில்மிஷம் பைக்கிலிருந்து குதித்த பெண்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலஹங்கா பகுதியில் இன்ஜினியராக பணியாற்றும் 30 வயது இளம் பெண், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.10க்கு, இந்திராநகர் செல்ல ரேபிடோ பைக்கை புக் செய்தார். சற்று நேரத்தில் பைக்கில் வந்த நபர், இளம் பெண்ணை பைக்கில் ஏற்றிக்கொண்டார். otpயை சரிபார்ப்பதாக கூறி, பெண்ணின் மொபைல் போனை டிரைவர் வாங்கினார். திரும்பத்தராமல் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றார். மொபைலை திரும்ப வாங்க முயன்ற பெண்ணின் கைகளை தடவி டிரைவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இந்திராநகர் செல்லும் பாதைக்கு பதிலாக வேறு பாதையில் பைக்கை திருப்பினார். தான் கடத்தப்படுவதை உணர்ந்த பெண், டிரைவரிடம் இருந்து மொபைலை பிடுங்கிக்கொண்டு பைக்கிலிருந்து குதித்தார். இதை எதிர்பார்க்காத ஆசாமி பைக்கை நிறுத்தாமல் தப்பினான். காயங்களுடன் உயிர் தப்பிய பெண், எலஹங்கா போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி வீடியோ அடிப்படையில், ரேபிடோ டிரைவர் தீபக் ராவ் வயது 27ஐ போலீசார் கைது செய்தனர். தீபக் ராவ், பைக் ஓட்டியபோது மது போதையில் இருந்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஏப் 26, 2023

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி