இரண்டு இளைஞர்களின் உயிரை குடித்த மது பார்ட்டி road accident bike accident 2 youth dies get-toget
சென்னை பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோயில் எதிரே இன்று அதிகாலை 4.30 மணியளவில் 2 இளைஞர்கள் அதிவேகத்தில் பைக்கில் சென்றனர். திடீரென தாறுமாறாக சென்ற பைக், சென்டர் மீடியனில் இருந்த மின்கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பள்ளிகரணை போக்குவரத்து போலீசார் 2 உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இளைஞர்கள் விஷ்ணு (24) கோகுல்(24) என தெரிய வந்தது. பெருங்குடியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நெருங்கிய நண்பர்கள். இவர்களுடன் வேலை பார்க்கும் அஜேஷ் பள்ளிகரணை ராஜலட்சுமி நகரில் வசிக்கிறார். அவரது வீட்டில் கெட் டுகெதர் பார்ட்டி நடந்துள்ளது. கோகுல் மற்றும் விஷ்ணு, விஷ்ணுவின் அண்ணன், அஜேஸ் உட்பட 8 பேர் பார்ட்டியில் பங்கெடுத்துள்ளனர். விடிய விடிய மது குடித்துள்ளனர்.