போலீஸ் அதிரடியில் பெண் மயங்கியதால் பதட்டம் | Roadblock protest | Sewage problem | Ponneri
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகளில் 2019 முதல் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. வீடுகள் இருக்கும் பகுதிகளில் குழாய்கள் பதித்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்த பின் ஆரணி ஆற்றில் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக லட்சுமிபுரம் கிராமத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. ஏற்கனவே பாதாள சாக்கடை சுத்திகரிப்பு தண்ணீரை ஆற்றில் வெளியேற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது ராட்சத குழாய் பதிக்கும் பணிக்காக வந்த அதிகாரிகள், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்களும், கால்நடைகளும் குடிநீராக பயன்படுத்தி வருவதாகவும், கழிவு நீரால் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் குற்றம் சாட்டினர். பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் ராட்சத குழாய் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதை கண்டித்து 2வது நாளாக 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பழவேற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்ததால் போலீசார் அவர்களை செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் தங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை நகர மாட்டோம் என கூறியதால், போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.