கோவையில் நூதன மோசடி! காதல் தம்பதி கைது | scam | Coimbatore | Investigation
கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இறைச்சி கடை நடத்தி வருகிறார். சென்ற ஞாயிறன்று இவரது கடைக்கு ஒரு தம்பதி வந்தனர். பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்தோம், ஏ.டி.எம் மில் கார்டு வேலை செய்யவில்லை. அவசரமாக 2,000 தேவைப்படுகிறது. உங்களுக்கு ஜிபே மூலம் பணம் அனுப்பி விடுகிறோம் என கூறி உள்ளனர். மருத்துவமனை அவசரம் என கூறியதை நம்பி சக்திவேல் 2,000 கொடுத்தார். பணம் அனுப்பியதாக குறுஞ்செய்தியை காண்பித்தனர். பணம் வந்து விட்டதாக சக்தி வேல் கருதினார். பின் மீண்டும் 2 ஆயிரம் கேட்டுள்ளனர். அதையும் வாங்கி கொண்டு பணம் அனுப்பி விட்டதாக காண்பித்து சென்றனர். நீண்ட நேரமாகியும் வங்கி கணக்கில் பணம் வராததால் சக்திவேல் ஷாக் ஆனார். அவர்கள் சொன்ன நம்பரில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. கவுண்டம்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.