/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ கல்வித்துறை சாதனை என அண்ணாமலை வேதனை | School | Education | Annamalai | Sivakasi
கல்வித்துறை சாதனை என அண்ணாமலை வேதனை | School | Education | Annamalai | Sivakasi
சிவகாசியில் திருத்தங்கல் சீ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளனர். அவர்களிடம் அறிவியல் ஆசிரியர் சந்திரமூர்த்தி விசாரித்துள்ளார். அப்போது மாணவர்கள் மீது மது வாடை வந்துள்ளது. மது குடித்தீர்களா என ஆசிரியர் கேட்டதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். . சந்தேகம் அடைந்த சந்திரமூர்த்தி, அவர்களை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து செல்ல முயன்றார். கோபமடைந்த மாணவன் ஒருவன் பையில் வைத்திருந்த மது பாட்டிலால் சண்முகசுந்தரத்தை தாக்கி உள்ளான். தலையில் பலத்த காயமடைந்த சந்திரமூர்த்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் 2 மாணவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஜூலை 16, 2025