உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / எடப்பாடியில் பகீர் சம்பவம்: போலீஸ் குவிப்பு | School Bus | Salem | Edappadi School

எடப்பாடியில் பகீர் சம்பவம்: போலீஸ் குவிப்பு | School Bus | Salem | Edappadi School

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கிருந்து எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு பள்ளி பேருந்துகள் இயக்கப்படுகிறது. திங்களன்று மாலை வெள்ளாண்டி வலசு பகுதிக்கு செல்லும் பேருந்து வழக்கம் போல கிளம்பியது. அப்போது 9ம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு இடையே யார் சீட் பிடிப்பது என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். சக மாணவர்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை. முகத்தில் குத்து விழுந்து மூக்கில் அடிபட்ட நிலையில் ஒரு மாணவர் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த ஆஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் பலமாக இருக்கிறது. மாணவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என டாக்டர்கள் கூறினர். மாணவன் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி