உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பள்ளியை இழுத்து மூட பெற்றோர்கள் சாலை மறியல் | School Girl | 4Year Child | Vikravandi

பள்ளியை இழுத்து மூட பெற்றோர்கள் சாலை மறியல் | School Girl | 4Year Child | Vikravandi

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் ஞானவேல். திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக உள்ளார். இவரது மகள் லியாலட்சுமி வயது 4 விக்கிரவாண்டியில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். இன்று மதியம் 12 மணியளவில் இடைவேளை விடப்பட்டது. பள்ளி வளாகத்தில் உள்ள பார்க்கில் குழந்தைகள் விளையாடின. பார்க்கின் ஒரு மூலையில் உள்ள செப்டிக் டேங்க்கின் இரும்பு மூடி துருப்பிடித்திருந்தது. அதன் மீது நின்று லியாலட்சுமி விளையாடினாள். அப்போது மூடி உடைந்து உள்ளே லியாலட்சுமி உள்ளே விழுந்தாள். உடனே மற்ற குழந்தைகள் கூச்சலிட்டன. பள்ளி ஊழியர்கள் ஓடிவந்தனர். செப்டிக் டேங்கில் மூழ்கிய குழந்தையை ஊழியர்கள் மீட்டனர். பேச்சு மூச்சற்ற நிலையில் கிடந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !