உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மகளுக்கு மெடிக்கல் சீட் வாங்க முயன்ற அரசு டாக்டருக்கு அதிர்ச்சி வைத்தியம்! Medical Seat | Medical Seat Fraud

மகளுக்கு மெடிக்கல் சீட் வாங்க முயன்ற அரசு டாக்டருக்கு அதிர்ச்சி வைத்தியம்! Medical Seat | Medical Seat Fraud

சென்னை, குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மகப்பேறு டாக்டர் கல்யாணி. எழும்பூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவரது மகள் அருணா, 2021ல் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். எனினும், அவருக்கு மெடிக்கல் சீட் வாங்க முயன்றார் கல்யாணி. அப்போதுதான், கார் டிரைவர் மகேஷ் மூலமாக அண்ணாநகரை சேர்ந்த ரூபியின் அறிமுகம் கிடைத்தது. மெடிக்கல் கவுன்சிலில் முக்கிய நபர்களை தெரியும். அவர்களை பிடித்து சீட் வாங்கி தருவதாக சொன்னார் ரூபி. அதை நம்பிய டாக்டர் கல்யாணி, கொஞ்சம் கொஞ்சமாக 27 லட்சம் ரூபாய் கொடுத்தார். சொன்னபடி சீட் வாங்கி தராமல் போக்கு காட்டினார் ரூபி. பணத்தையும் திருப்பி தரவில்லை. கல்யாணி எச்சரித்து கேட்டும் அசால்ட்டாக இருந்தார். தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆபிசில் கல்யாணி புகார் அளித்தார். குரோம்பேட்டை போலீசார் ரூபியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜூலை 10, 2023

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை