வியாபாரியை தாக்கிய எஸ்ஐ தூக்கி அடிப்பு | SI Attacked shopkeeper | thanjavur | Gutka raid
காலில் விழுந்த வியாபாரி போலீஸ் அதிகாரி அடாவடி ஷாக்கிங் வீடியோ தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் முக்கூட்டு சாலை பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் திருநாவுக்கரசு (65). இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு யாரோ தகவல்கொடுத்தனர். கடந்த 5ம் தேதி மதுக்கூர் சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் கடையில் சோதனை செய்தனர். அப்போது, எஸ்ஐ ஜீவானந்தம் புகையிலை பொருளை எடுய்யா என மிரட்டியபடி தாக்கியுள்ளார். பயந்துபோன கடைக்காரர் திருநாவுக்கரசு சப் இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். கடையில் இருந்த திருநாவுக்கரசு மகனையும் இன்ஸ்பெக்டர் மிரட்டியுள்ளார்.