உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சிலை கடத்தல் தடுப்பு போலீசுக்கு பக்தர்கள் கோரிக்கை | skanda statue london

சிலை கடத்தல் தடுப்பு போலீசுக்கு பக்தர்கள் கோரிக்கை | skanda statue london

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் உற்சவர் விக்ரகத்தில் இருந்த ஸ்கந்தர் சிலை 1992 நவம்பர் 7ல் மாயமானது. உற்சவர் விக்ரகத்துக்கு மாலை போட்டு எடுக்கும்போது ஸ்கந்தர் சிலை உடைந்து தவறியிருக்க கூடும் எனவும், திருடுபோயிருக்க வாய்ப்பில்லை எனவும், கோவில் நிர்வாகம் 1992ல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் சிவகாஞ்சி போலீசில் கடந்த 1993ல் அப்போதைய அறநிலையத்துறை செயல் அலுவலர் வெங்கடேசன் என்பவர் புகார் அளித்தது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஸ்கந்தர் சிலை மாயமான காரணத்தால் 1993ல் புதிதாக செய்யப்பட்ட ஸ்கந்தர் சிலை உற்சவர் விக்ரகத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சோமாஸ்கந்தர் சிலையிலிருந்து மாயமான ஸ்கந்தர் சிலை, லண்டனில் உள்ள தனியார் அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதுசம்பந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே அமெரிக்காவுக்கு இன்னொரு சோமாஸ்கந்தர் சிலை கடத்தப்பட்டு அதனை மீட்கும் பணிகள் நடக்கிறது. அதே போல இந்த சிலையும் கடத்தப்பட்டு லண்டனுக்கு போயிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. லண்டனில் இருப்பதாக சமூக வலை தளங்களில் வெளியாகும் புகைப்படங்களில் ஸ்கந்தர் சிலை இரு கால்களும் இன்றி காணப்படுகிறது. சோமாஸ்கந்தர் விக்ரகத்தில் இருந்து ஸ்கந்தர் சிலையை தனியாக அறுத்து எடுத்த காரணத்தாலேயே கால்கள் இன்றி இருக்கிறது என பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்த ஸ்கந்தர் உற்சவ சிலை. மிக பழமையான ஸ்கந்தர் சிலையை மீட்டு ஏகாம்பரநாதர் கோயிலுக்கு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை