உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / திருவிழாவில் செயின் பறிக்கும் தம்பதி சிக்கியது எப்படி? Theft | Couple Arrest | Srivilliputhur

திருவிழாவில் செயின் பறிக்கும் தம்பதி சிக்கியது எப்படி? Theft | Couple Arrest | Srivilliputhur

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஆகஸ்ட் 7ம் தேதி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருட்டு, வன்முறை சம்பவங்கள் நடக்காமல் இருக்க, 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருந்தும் கட்டுக்கடங்காத கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசையை காட்டிவிட்டு எஸ்கேப் ஆகினர். 5 பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்த, 18 பவுன் தங்க செயின்களை நைசாக அபேஸ் செய்து சென்றனர். 1500 போலீஸ் குவிக்கப்பட்டும் எப்படி செயின் பறிப்பு நடந்தது என போலீசார் குழப்பினர். டென்ஷன் ஆன எஸ்பி கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர் முத்துகுமார் குற்றவாளிகளை பிடிக்க திட்டமிட்டனர். கோயிலை சுற்றியுள்ள, ரத வீதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை நொடிக்கு நொடி விடாமல் ஆராய்ந்தனர்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ