வேளாண் அலுவலகத்தில் அதிகாரியின் கோலம் | Officer | Tasmac
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வேளாண் அலுவலகம் உள்ளது. புளியங்குடியை சேர்ந்த அறிவழகன் உதவி இயக்குநாராக உள்ளார். நேற்று மதியம் விவசாயிகள் அலுவலகத்துக்கு சென்ற போது அதிகாரி அறிவழகன் செம்ம போதையில் இருந்தார். சேரில் தலை தொங்கியபடி நிதானம் இல்லாமல் சரிந்து கிடந்தார். சிறிது நேரம் கழித்து அலுவலக தரையில் படுத்துக்கொண்டார். வேளாண் அலுவலகத்தில் இரண்டு பெண் பணியாளர்கள் உட்பட 7 பேர் பணி புரிகின்றனர். அதிகாரியான அறிவழகனே இப்படி நடந்து கொண்டதால் அவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
ஆக 14, 2024