உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / உஷாரா இருந்தாலும் இப்படி கூட திருட்டு நடக்குது | Theft | Salem | CCTV

உஷாரா இருந்தாலும் இப்படி கூட திருட்டு நடக்குது | Theft | Salem | CCTV

சேலம் நாராயண நகர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ், வயது 75. மனைவி பிரேமா, வயது 67. இவர்கள் மட்டும் தனியாக வசிக்கின்றனர். வெள்ளியன்று மதியம் இரண்டு இளைஞர்கள் தண்ணீர் கேட்டு வந்துள்ளனர். கதவை திறக்காமல் உள்ளே இருந்து கொண்டே பிரேமா அவர்களிடம் பேசினார். இளைஞர்கள் மீது சந்தேகமாக இருந்ததால் தண்ணீர் தர முடியாது என்றார். கதவை உள்பக்கமாக தாளிட்டு அடைத்துவிட்டு உள்ளே சென்றார். அங்கிருந்து கிளம்பியது போல நடித்த இளைஞர்கள் பக்கத்து வீட்டு மாடியில் ஏறி மாதவராஜ் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அவரை தாக்கிவிட்டு பிரேமாவின் கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பிரேமாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டனர். இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கொள்ளையன்கள் தப்பி ஓடும் காட்சி அருகில் இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. 2 கொள்ளையன்களில் ஒருவன் ஏற்கனவே மாதவராஜ் வீட்டுக்கு வந்துள்ளான். அப்போதும் தாகமாக இருக்கிறது என தண்ணீர் கேட்டு வீட்டை நோட்டமிட்டுள்ளான். மீண்டும் அவனே இன்னொரு ஆசாமியுடன் வந்ததால் பிரேமா உஷாரானார். பத்திரமாக கதவை பூட்டிவிட்டு உள்ளே இருந்த போதிலும் கொள்ளையன்கள் பக்கத்து வீடு வழியாக உள்ளே நுழைந்தனர் மாதவராஜ் கூறினார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ஏப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி