தொடரும் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு | landslide| mountain-road|leading-to-tirupati|ezhumalay
திருமலையில் ஏழுமலையானை தரிசித்துவிட்டு திருப்பதிக்கு வருவதற்கு ஒரு மலைப் பாதையும், திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் செல்ல இன்னொரு மலைப் பாதையும் உள்ளது. திருமலைக்கு செல்லும் மலைப் பாதையில் 5வது கிலோ மீட்டர் தொலைவில் இன்று நில சரிவு ஏற்பட்டது. மலை உச்சியில் இருந்து கற்களுடன், மண்ணும் சரிந்து சாலையில் குவிந்தது. பக்தர்களின் வாகனங்கள் எதுவும் செல்லாததால் அசம்பாவிதம் நேரவில்லை. அதே சமயம், நில சரிவு ஏற்பட்ட பிறகு போக்குவரத்து பாதிப்பு உண்டானது. திருப்பதி தேவஸ்தானத்தின் பொறியியல் துறையினர் வந்து சாலையில் கிடந்த கற்கள் மற்றும் மண்ணை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். கடந்த 3 தினங்களாக திருப்பதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப் பாதையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. மலைப் பாதைகளில் நில சரிவு ஏற்படும் என்பதால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்யும்படி திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.