தூத்துக்குடி பூசாரி சம்பவம்: பழிதீர்த்த கல்லூரி மாணவன் | Thoothukudi | Temple priest |Crime News |
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். டெய்லர். இவரது மனைவி முத்து விஜயா. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். தூத்துக்குடி மூணாம்மயில் பகுதியில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்துக்கு விஜயா அடிக்கடி சென்று சாமி கும்பிடுவது வழக்கம். அப்போது அந்த கோயில் பூசாரி ரவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அதை முத்துராமலிங்கம் கண்டித்தார். ஆனாலும் விஜயா தொடர்நது கோயிலுக்கு போய் பூசாரியை பார்த்து பழகினார். கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால் கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டது. 2 மகள்களை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு விஜயா வெளியேறினார். பூசாரி ரவியும் தன் மனைவியை விட்டு வந்தார். ஏரல் அருகே உள்ள சொத்து பலங்கரை கிராமத்தில் இருவரும் 4 ஆண்டாக திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன் விஜயா, ரவி ஆ.சண்முகபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர். 2 மகள்களும் அவர்களுடன் இருந்தனர். மூத்த மகன் அப்பா முத்துராமலிங்கத்துடனும் இருந்தான். இந்நிலையில் நேற்றிரவு 9:30 மணி அளவில் அருகில் உள்ள ஒரு பாஸ்ட்புட் கடையில் விஜயாவின் பெண் குழந்தைகளுக்கு சிக்கன் 65 வாங்க பூசாரி ரவி சென்றார். சிக்கன் வாங்கிக் கொண்டிருந்தபோது ஒரு பைக் வேகமாக வந்து அவர் அருகில் நின்றது. அதில் இருந்து விஜயாவின் மூத்த மகனும் இன்னொரு வாலிபரும் இறங்கினர். அவர்கள் கையில் அரிவாள் இருந்தது. பூசாரி ரவி அச்சத்தில் உறைந்து நின்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரி வெட்டினர். ரத்த வெள்ளத்தில் ரவி சாய்ந்ததும் 2 வாலிபர்களும் தப்பி ஓடினர். சம்பவ இடத்திலேயே ரவி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சில நொடிகளில் கொலை நடந்து முடிந்ததை பார்த்து கடைக்காரரும் கஸ்டமர்களும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.