உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சூட்கேசில் பெண்ணின் உடல்; நடந்தது இது தான்! | Crime | Thuraipakkam Crime news | Police investigation

சூட்கேசில் பெண்ணின் உடல்; நடந்தது இது தான்! | Crime | Thuraipakkam Crime news | Police investigation

சென்னை, துரைப்பாக்கம் குமரன் குடில் தெருவில் பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு சூட்கேசில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் நேற்று அதிர வைத்தது. அப்பெண்ணின் போன் விபரம், அப்பகுதி சிசிடிவி கேமராவை வைத்து அதே பகுதியில் வசித்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். சூட்கேசில் இறந்து கிடந்தது, மாதவரத்தை சேர்ந்த பெண் என்பது தெரியவந்தது. போலீசார் வந்த போது எதுவும் நடக்காததுபோல் அமைதியாக உப்புமா சாப்பிட்டு கொண்டிருந்த மணிகண்டன் தான் இந்த கொடூர காரியத்தை செய்தவன். மணிகண்டன் அளித்த வாக்கு மூலம் குறித்து போலீசார் கூறியதாவது; சிவகங்கையை சேர்ந்த மணிகண்டனுக்கு வயது 26. சகோதரி வீட்டில் தங்கி, பெருங்குடியில் உள்ள கார் நிறுவனத்தில் 2 மாதங்களாக வேலைக்கு சென்று வந்தான். கடந்த 16ம் தேதி இவனது சகோதரி குடும்பத்தினருடன் சிவகங்கை சென்றார். வீட்டில் யாரும் இல்லாததால், பெண்ணுடன் உல்லாசமாக இருக்க திட்டமிட்டு ஆன்லைன் வழியாக மாதவரத்தை சேர்ந்த 31 வயது பெண்ணை தொடர்பு கொண்டான். ஒரு நாள் இரவு தனியாக இருக்க அவர் 10,000 ரூபாய் கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்த மணிகண்டன், 17ம் தேதி இரவு அந்த பெண்ணை வீட்டுக்கு வரவழைத்தான். அந்த பெண் கிளம்பியபோது மணிகண்டன் 6,000 ரூபாய் கொடுத்துள்ளான். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சத்தமிட்டு ஊரை கூட்டி அசிங்கப்படுத்துவேன் என அந்த பெண் ஆவேசமாக பேசியுள்ளார். ஆத்திரமடைந்த மணிகண்டன், வீட்டில் இருந்த சுத்தியலால் தீபா தலையில் பலமாக தாக்கினான். மூளை சிதறி அப்பெண் அங்கேயே இறந்தார்; ஒரு நாள் சடலத்தை வீட்டிலேயே வைத்து உள்ளான். பின் யாருக்கும் தெரியாமல் சடலத்தை வீட்டில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டான். மறுநாள் பெருங்குடியில் உள்ள ஒரு கடையில் பெரிய சூட்கேஸ் வாங்கி அதில் பெண்ணின் உடலை திணித்தான்.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை