உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / திருப்பத்தூர் கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு | tirupathur sivarajpet people protest water issue

திருப்பத்தூர் கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு | tirupathur sivarajpet people protest water issue

திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ் பேட்டை பகுதியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அதே பகுதியில் உள்ள இரண்டரை ஏக்கர் காலி இடத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் காலரா போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒருவாரம், 10 நாளுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. 30 ஆண்டாக சாலை வசதியும் இல்லை. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜூலை 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை