4 முறை எல்லை மீறிய ஹெட்மாஸ்டர்: பணி நீக்க அறிவிப்பு கண் துடைப்பா? | Tirupattur | Pocso Act
திருப்பத்தூர் மாவட்டம், மேல் சாணாங்குப்பத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு பாரத் அம்பேத்கர் என்பவர் ஹெட்மாஸ்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் குடிபோதையில் பள்ளிக்கு வந்துள்ளார். இதனை கவனித்த ஊர் மக்கள் அவரது நடவடிக்கையை கண்காணித்தனர். பள்ளி சென்று பார்த்த போது 5ம் வகுப்பு மாணவியை மடியில் அமர வைத்திருந்தார். பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை வீடியோ எடுத்த மக்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளியில் ஆய்வு நடத்தினர். ஹெட்மாஸ்டர் அம்பேத்கரிடம் விசாரணை நடத்தினர். தற்போது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அம்பேத்கார் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர். இதற்கு முன் 4 முறை இதே போல பல தவறுகள் செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 15 நாட்களுக்கு முன்னர் தான் சாணாங்குப்பம் பள்ளிக்கு மாறுதலாகி வந்தார். இவரின் பின்னணி அறிந்தே அப்பகுதி மக்கள் கண்காணித்து வந்தனர். எதிர்பார்த்தது போலவே இங்கும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு சிக்கியுள்ளார் ஆசிரியர் அம்பேத்கர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மலைவாசன் உமராபாத் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அம்பேத்கரை கைது செய்தனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி தொடர்ச்சியாக குற்றங்கள் செய்வோருக்கு பணியிடை நீக்கம் போதாது என்கின்றனர் ஆர்வலர்கள். பணி நீக்கம் செய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்வதோடு, அவர்களின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என சில மாதங்களுக்கு முன் கல்வி அமைச்சர் மகேஷ் கூறி இருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு என்ன நிலையில் இருக்கிறது. அம்பேத்கர் போல தொடர் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணியிடை நீக்கம் மட்டும் தான் தண்டனையா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. #Tirupattur #MelSanankuppam #GovernmentSchool #Teacher #SexualAbuse #PocsoAct #Suspension #Dismissal #EducationDepartment #TamilNadu #Justice #StudentSafety #RepeatOffender