வாக்கிங் போனவர் என்ன ஆனார்? அதிர வைக்கும் காட்சி | Tirupur | Avinashi
பார்த்தாலே உடம்பெல்லாம் பதறுது திருப்பூரில் மீண்டும் கோர சம்பவம் திருப்பூர் அவிநாசி அருகே உள்ள காசி கவுண்டம்புதூரை சேர்ந்தவர் ரமேஷ், வயது 47. கார் கன்சல்டிங், பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி வித்யா. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தினமும் அவிநாசி பைபாஸ் அருகே ரமேஷ் வாக்கிங் செல்வது வழக்கம். காலை வாக்கிங் சென்ற போது காரில் வந்த கும்பல் அவரை வழிமறித்துள்ளது. அரிவாளால் சராமாறியாக வெட்டிவிட்டு தப்பி உள்ளனர். தலை, கைகளில் பலத்த காயம் பட்ட ரமேஷ் ரத்த வெள்ளத்தில் துடித்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவிநாசி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ரமேஷை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.
டிச 01, 2024