உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / திருப்பூரை உலுக்கிய சம்பவம்; முதலில் பார்த்தவர் பேட்டி | Tirupur Crime | Investigation | Tirupur Pol

திருப்பூரை உலுக்கிய சம்பவம்; முதலில் பார்த்தவர் பேட்டி | Tirupur Crime | Investigation | Tirupur Pol

திருப்பூர் சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அமலாத்தாள் அவர்களது மகன் செந்தில்குமார் நேற்று இரவு கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டனர். அவர்களது 15 ஏக்கர் தோட்டத்து வீட்டில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. வீட்டில் 8 பவுன் நகை திருடு போயுள்ளது. போலீசார் 7 தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தெய்வசிகாமணி, அமலாத்தாள் வயதான தம்பதிகள். ஐடி ஊழியரான செந்தில்குமார் திருமணமாகி கோவையில் வசிக்கிறார். அவரின் செல்போனும் திருடு போயுள்ளது. அந்த நம்பருக்கு வந்த அழைப்புகள் , அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவத்தை முதலில் அறிந்தது அதே பகுதியை சேர்ந்த சவர தொழிலாளி வலுப்புரான் தான்.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ