உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சிகிச்சை முடிந்து வந்த இரண்டே நாளில் அதிர்ச்சி | Tiruvallur | Tiruvallur Attack | Viral Video

சிகிச்சை முடிந்து வந்த இரண்டே நாளில் அதிர்ச்சி | Tiruvallur | Tiruvallur Attack | Viral Video

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரை சேர்ந்தவர் மணிகண்டன், வயது 35. போதை பழக்கத்திற்கு ஆளான இவர் சென்னையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஆறு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். ஞாயிறன்று இரவு வீட்டு அருகில் உள்ள காக்களூர் பை-பாஸ் ரோட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்ததாக தெரிகிறது. இதை பார்த்த சிலர் பைக்கை திருட வந்துள்ளதாக நினைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் திருவள்ளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி