வாலிபருக்கு நடந்த சோகம் திருவண்ணாமலை சம்பவம் | Tiruvannamalai | Vck | Crime News
Tiruvannamalai police crime assault case man attacked police complaint VCK functionary திருவண்ணாமலை சமுத்திரம் காலனியைச் சேர்ந்தவர் அஜித்குமார். வேங்கிக்கால் பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பணியை முடித்துக் கொண்டு இரவு வீட்டுக்கு செல்ல கடை வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கை எடுக்க சென்றார். அப்போது ஒரு வெள்ளை நிற கார் பின்னோக்கி வந்து, அஜித்குமார் வண்டி மீது மோதியது. காரை எடுக்கும்போது சுத்தி பாக்க மாட்டீங்களா? என டிரைவரிடம் அஜித்குமார் கேட்டார். அஜித்குமாருக்கும் காரில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அஜித்குமாருக்கு ஆதரவாக சலூனில் வேலை பார்க்கும் சக ஊழியர் வந்தார். காரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை நகர பொறுப்பாளர் அருண்குமாரும் நண்பர்களும் இருந்தனர்.. அவர்கள் காரை விட்டு இறங்கி வந்து அஜித்குமார் மற்றும் நண்பரை தாக்கினர்.