ரேஷன் பொருட்கள் வாங்கி வந்த போது நடந்த சோக சம்பவம்! | Tractor Accident | Muthukulathur | Ramanad
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கூவர்கூட்டம் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 15க்கும் மேற்பட்டோர், ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக டிராக்டரில் பொதிகுளம் கிராமத்துக்கு சென்றனர். ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி, டிராக்டரில் அடுக்கி வைத்து, அதன் மீது அமர்ந்து கொண்டு சொந்த கிராமத்துக்கு புறப்பட்டனர். ஊருக்கு செல்லும் வழியில் திடீரென டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிராக்டருக்கு அடியில் சிக்கிய பொன்னம்மாள், முனியம்மாள், ராக்கி ஆகிய 3 முதியோர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பத்துக்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முதுகுளத்தூர் அரசு ஆஸ்பிடலில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் மேல் சிகிச்சைக்காக அனைவரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.