உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / நெல்லையில் திருநங்கைகள் மீது தடியடி: நள்ளிரவில் பதட்டம் | Transgenders protest | Police baton | Pana

நெல்லையில் திருநங்கைகள் மீது தடியடி: நள்ளிரவில் பதட்டம் | Transgenders protest | Police baton | Pana

நெல்லை பணகுடி அருகே பைபாஸ் ரோட்டில் திருநங்கைகள் இரவு நேரங்களில் பாலியல் தொழில் செய்து வருகின்றனர். வாகனங்களில் செல்வோரை வழிமறித்து தொழில் செய்யும் இவர்கள், சிலரிடம் வலுக்கட்டாயமாக வழிப்பறி செய்வதும் தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக டூவீலரில் செல்பவர்களை வழிமறித்து அவர்களின் செல்போன், பணத்தை பறித்து அடாவடியில் ஈடுபடுவதாக பணகுடி போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றுள்ளது. நேற்று முன்தினம் அடாவடியில் ஈடுபட்ட 2 திருநங்கைகளை போலீசார் விசாரணைக்காக பணகுடி காவல் நிலையம் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று இரவு திருநங்கைகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, 2 பேரையும் கைது செய்யவில்லை. விசாரணைக்கு பிறகு அனுப்பி விடுவோம். அனைவரும் கலைந்து சொல்லுங்கள் என போலீசார் கூறியுள்ளனர். போலீசாரின் சமாதானத்தை ஏற்காத திருநங்கைகள் தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டுள்ளனர். பலமுறை சொல்லியும் கலைந்து செல்லாமல் பணிக்கு இடையூறு செய்ததால் ஆத்திரமடைந்த போலீசார் தடியடி நடத்தி திருநங்கைகளை அடித்து விரட்டினர்.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி