உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்த ஊர்மக்கள் | Trichy | Temple Theft | CCTV

கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்த ஊர்மக்கள் | Trichy | Temple Theft | CCTV

திருச்சி தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் மதுரைவீரன் கோயில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த பூசாரி தனபால் கோயிலில் பூஜை செய்து வருகிறார். வழக்கம்போல இரவு பூஜைகள் முடித்து கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதை நோட்டமிட்ட ஆசாமி பூசாரி கிளம்பியதும் கோயிலுக்குள் நுழைந்தான். சாமி கழுத்தில் போடப்பட்டிருந்த ரூபாய் நோட்டு மாலையை சுருட்டியுள்ளான். பூட்டை உடைத்து கருவறை அருகே சென்று உண்டியலை உடைத்துள்ளான். அப்போது கோயில் அருகே குடியிருந்தவர்களுக்கு சத்தம் கேட்டுள்ளது. சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் மறைந்திருந்து கண்காணித்துள்ளனர். கோயிலுக்குள் நுழைந்த ஆசாமியை ஆதாரத்துடன் பிடிக்க ரகசியமாக வீடியோ எடுத்தனர்.

பிப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை