உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை: பதற்றம் | trichy bomb threat schools and colleges trichy police

வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை: பதற்றம் | trichy bomb threat schools and colleges trichy police

தமிழகம் முழுவதும் காலாண்டு விடுமுறை முடிந்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் இன்று முதல் பள்ளிகளுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் திருச்சியில் உள்ள 8 பள்ளிகள், 2 கல்லூரிகளுக்கு இன்று காலை 7 மணி அளவில் சுவேதா என்கிற பெயரில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி , மான்போர்ட் பள்ளி, சம்மத் பள்ளி, ஆர்சிட் பள்ளி, ஆச்சாரியா பள்ளி, கேம்பியன் பள்ளி, செயின்ட் ஆன்ஸ் பள்ளி, ராஜம் பப்ளிக் ஸ்கூல் ஆகிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை முதலில் பார்த்த திருச்சி காட்டூர் மான்போர்ட் பள்ளி நிர்வாகத்தினர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்தனர்.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ