உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ரவுடியை தீர்த்துக்கட்டியது யார் கும்பலை தேடும் போலீசார் | Rowdy | Atack | Crime News

ரவுடியை தீர்த்துக்கட்டியது யார் கும்பலை தேடும் போலீசார் | Rowdy | Atack | Crime News

திருச்சி ஸ்ரீ ரங்கத்தை சேர்ந்தவர் ரவுடி அன்பரசன். வயது 32. பிரபல ரவுடி திலீப்பின் வலது கரமாக இருந்தவர். இவர் மீது அடிதடி, மிரட்டில் விடுத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அன்பரசன் ஸ்ரீரங்கம் -மேலூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த கும்பல் அவரை சுத்துபோட்டது. உயிர் பயத்தில் அன்பு அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்றார். ஆனால், அந்த கும்பல் விரட்டி சென்று, அன்புவை அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு தப்பிசென்றது. ஸ்ரீரங்கம் கோயில் அருகே நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி அன்புவின் உடல் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீரங்கம் மருத்துவமனை முன் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேக்கப்படுகின்றனர். தப்பியோடிய குற்றவாளி கும்பலை அவர்கள் தேடி வருகின்றனர்.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை